திரு. கயிலைமணி முத்து சுப்ரமண்ய தீக்ஷிதர்
மறக்கருணை புரிந்து, சூரபத்மனை மயிலாகவும் சேவலாகவும் மாற்ற, முருகப் பெருமான் கயிலை மலையிலிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்த போது, அவரையும் சேர்த்து ஈராயிரம் திரிசுதந்திரர்களும் வந்தனர். இதை " உஸ்மாசு அஹம் ஏக்கஹ - உங்களில் நானும் ஒருவன் " என முருகன் கூறுவதாக வடமொழி ஸ்காந்தம் சொல்லுகிறது. அவ்வளவு பெருமை மிக்க செந்தில் மாநகர் திரிசுதந்திரருள், பக்த சிரோண்மணிகளான திரு. மூக்கண்ணா எனும் திருவாரியாரும், அடியேனின் தகப்பனார் திரு. சங்கர நாராயண தீக்ஷிதரும் மற்றும் பலரும் சேர்ந்து, 1937-ல் ஸ்ரீ முருகானந்த சங்கீத திருப்புகழ் சபையை ஆரம்பித்து திருப்புகழைப் பாடி பரப்பினர்.
அச்சமயம், நீதிபதி, திருப்புகழ் மணி, டி. எம். கிருஷ்ணசாமி ஐயர் இச்சபைக்கு ரூ.1001/- நன்கொடையாக வழங்கி ஊக்குவித்துள்ளார். அது கொண்டு திருப்புகழ் வளர்ச்சிக்கென இவ்வூர் தெப்பக்குள தெருவில் 33 செண்டு நிலம் வாங்கி அதில் ஒரு கட்டிடமும் கட்டி பிரதி ஆண்டும் சபையின் பிரம்மோத்சவமாக ஆனிமாதத்தில் வரும் சுக்கில பக்ஷ குமார சஷ்டியை பெருவிழாவாக கொண்டாடி வந்துள்ளனர். அவ்வரிசையில் 15-07-2021 அன்று 84--வது குமார சஷ்டி பெருவிழாவை கொண்டாடினதை பல்லாயிரக்கணக்கில் திருப்புகழ் பாடும் அன்பர்களும் முருகனடியார்களும் நேரலையில் தரிசித்துள்ளனர்
மேலும் படிக்க12 Nov 2021
பாடசாலை, திருச்செந்தூர்
12 Nov 2021
பாடசாலை, திருச்செந்தூர்
12 Nov 2021
பாடசாலை, திருச்செந்தூர்
12 Nov 2021
பாடசாலை, திருச்செந்தூர்
12 Nov 2021
பாடசாலை, திருச்செந்தூர்
12 Nov 2021
பாடசாலை, திருச்செந்தூர்
அகிலத்து அனைத்து முருகனடியார்களும் திருப்புகழ் பாடும் அன்பர்களும் இவ்வாலய திருப்பணி பூரணமடைய மனம், மொழி, மெய் இம்மூன்றாலும் திருப்பணிகளைச் செய்ய வேணுமாய் பிரார்த்தனை செய்கிறேன்
1. தரிசனத்த்கிற்காக, திருச்செந்தூர் வரும் போதெல்லாம் குளக்கரை செந்திலாண்டவனையும் தரிசிக்க நீங்கள் அனைவரும் இச்சபைக்கு வர வேண்டுகிறேன்.
2. இந்த திருப்புகழ் சபையில் அவன் ஆலயம் வளர, அவனைப் பற்றிய இந்த செய்திகளை அனைத்து மெய்யடியார்களிடமும் தயவு செய்து தெரிவியுங்கள்.
3. தங்களின் திருவுள்ளத்தில் அவன் உணர்த்திய படி, அவனுடைய ஆலயம் கட்டப்பட அதில் செய்யப்பட வேண்டிய சிறு சிறு திருப்பணிகளை நேரிடையாகச் செய்தோ அல்லது திரவியமாக நன்கொடை அளித்தோ உதவி புரிய வேணுமாய் பிரார்த்திக்கிறேன்
இங்ஙனம்
கயிலைமணி முத்து சுப்ரமண்ய தீக்ஷிதர்
திருச்செந்தூர்
Account Holder Name:
Sri Muruganantha Sangeetha Thiruppugazh Sabhai
Name of the Bank: Indian Bank, Tiruchendur.
Account Number: 7101859730.
IFSC Code: IDIB000T136.